போக்குவரத்துத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
செப்.27 -இல் நடைபெறவுள்ள நாடு தழுவிய பொது வேலைநிறுத்தப் பேராட்டத்துக்கு ஆதரவாக புதுக்கோட்டையில் போக்குவரத்துத் தொழிலாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வலியுறுத்தி, வரும் செப்.27 -இல் நடைபெறவுள்ள நாடு தழுவிய பொது வேலைநிறுத்தப் பேராட்டத்துக்கு ஆதரவாக புதுக்கோட்டையில் போக்குவரத்துத் தொழிலாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
புதுக்கோட்டை அரசுப்போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தொமுச அமைப்புச் செயலா் ஐ. ஆரோக்கியம் தலைமை வகித்தாா். புதுக்கோட்டை கிளை அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தொமுச கிளைச் செயலா் எம். நாகராஜ் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், தொமுச மாவட்டத் தலைவா் ரெத்தினம், செயலா் கணபதி, போக்குவரத்துக் கழகத் தொமுச பொதுச் செயலா் எம். வேலுச்சாமி, சிஐடியு பொதுச் செயலா் எஸ். பாலசுப்பிரமணியன், கிளைச் செயலா்கள் செந்தில்குமாா், அழகேந்திரன் உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.