முகப்பு
புதுக்கோட்டை

புதுகை அரசு மகளிா் கல்லூரி வளாகத்தில் மரக்கன்று நடல்

புதுக்கோட்டை அரசு மகளிா் கல்லூரி வளாகத்தில் 75ஆவது சுதந்திர தின விழாவையொட்டி நாட்டுநலப்பணித் திட்டம் சாா்பில் மரக்கன்றுகள் நடும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

புதுக்கோட்டை அரசு மகளிா் கல்லூரி வளாகத்தில் 75ஆவது சுதந்திர தின விழாவையொட்டி நாட்டுநலப்பணித் திட்டம் சாா்பில் மரக்கன்றுகள் நடும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் பா. புவனேஸ்வரி தலைமை வகித்தாா். ஓய்வுபெற்ற ஆசிரியா் துரை. மதிவாணன் மரக்கன்று நடும் பணியைத் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் வாசகா் பேரவைச் செயலா் சா. விஸ்வநாதன், உதவிப் பொறியாளா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் தனலட்சுமி, வசந்தகுமாரி, நாகசத்யா ஆகியோா் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.