புதுக்கோட்டை

விராலிமலையில் தென்னங்கீற்றில் தலைவர்களின் உருவங்களை செதுக்கிய மாணவர்கள்

மனிதகுல வரலாற்றின் தொடக்கத்தில் பழங்கால மனிதர்கள் குகை, குகைகளைப் போன்ற அமைப்புடைய பாறைப் பகுதிகளில் வாழ்ந்தனர்.

சி. உதயகுமார்

விராலிமலை: மனிதகுல வரலாற்றின் தொடக்கத்தில் பழங்கால மனிதர்கள் குகை, குகைகளைப் போன்ற அமைப்புடைய பாறைப் பகுதிகளில் வாழ்ந்தனர். வேட்டையாடுவதை  முதன்மையாகக் கொண்ட அந்த சமூகத்தினர் தகவல் தொடர்புக்காகவோ, நம்பிக்கை மற்றும் சடங்குகள் சார்ந்தோ தங்கள் வாழ்விடங்களான குகைகள் மற்றும் பாறைகளில் ஓவியங்களை வரைந்து அதன் மூலம் தகவல் பரிமாற்றங்களை கொண்டு வாழ்ந்து வந்தனர். 

அத்தகைய பாறை ஓவியங்கள் தமிழகத்தில் பெருமளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் ஓவியங்கள் என்பது நம் வாழ்வின் ஒரு அம்சமாகவே தற்போதும் கருதப்படுகிறது.

இந்த நிலையில் விராலிமலையைச் சேர்ந்த பிஎஸ்சி வேதியியல் படித்த மாணவர் நேதாஜி மற்றும் முதலாமாண்டு மருத்துவம் படித்து வரும் மாணவர் குகன் ஆகிய இருவரும் விடுமுறை நாட்களை பொழுதுபோக்காக கழிக்காமல் தங்களது திறனை வெளிக்கொணரும் நோக்கில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்து, தென்னங்கீற்றை செதுக்கி உருவம் அமைக்க முயற்சித்தனர் 

இந்நிலையில் தொடக்கத்தில் சற்று தடுமாற்றம் இருந்தபோதும் தற்போது அவர்கள் முயற்சி முழுவதுமாக வெற்றி பெற்று தென்னங்கீற்றில் தத்ரூபமாக உருவங்கள் செதுக்கப்படுவது என்பது பொது மக்களின் பாராட்டை பெற்று வருகிறது.

அந்த வகையில் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர், சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திரபோஸ், மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மற்றும் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் ஆகியோர் உருவங்களை தென்னங்கீற்றில் செதுக்கி அசத்தியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

மங்காத்தா ரீ-ரிலீஸ்? இயக்குநர் அப்டேட்! ரசிகர்கள் ஆவல்!

பந்துவீச்சாளராகவும் கேப்டனாகவும் சாதனை நிகழ்த்திய பாட் கம்மின்ஸ்!

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

SCROLL FOR NEXT