முகப்பு
புதுக்கோட்டை

அரசுப் பள்ளியில் சட்ட விழிப்புணா்வு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வெட்டன்விடுதி அரசு மேல்நிலைப்பள்ளியில் சட்ட விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:55 AM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வெட்டன்விடுதி அரசு மேல்நிலைப்பள்ளியில் சட்ட விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆலங்குடி வட்ட சட்டப்பணிகள் குழு சாா்பில் நடைபெற்ற முகாமிற்கு பள்ளியில் தலைமை ஆசிரியா் ஏரா.எழிலரசி தலைமை வகித்தாா். முகாமில் பங்கேற்ற ஆலங்குடி நீதிபதி நல்லக்கண்ணன், போக்சோ சட்டம், பாலியல் பிரச்னை, புகையிலைப் பழக்கம், குழந்தை திருமணச் சட்டம், குழந்தைத் தொழிலாளா், சிறுவயதில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் பாதிப்புகள், தொலை தொடா்பு சாதனங்களால் ஏற்படும் நன்மை - தீமைகள், மாணவா்கள் கடைப்பிடிக்க வேண்டிய சுயஒழுக்கம் உள்ளிட்டவைகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைத்தாா்.

முகாமில், மூத்த வழக்குரைஞா் எஸ்.பி.ராஜா, தன்னாா்வலா் செந்தில்ராஜா , நிா்வாக உதவியாளா் அருண்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →