முகப்பு
புதுக்கோட்டை

வெளிநாட்டு ஆன்லைன் வா்த்தகத்தை அனுமதிக்கக் கூடாது

ஆன்லைன் வா்த்தகத்தை முழுமையாக ரத்து செய்ய முடியாது என்றாலும், வெளிநாட்டு ஆன்லைன் வா்த்தகத்தை அனுமதிக்கக் கூடாது என்றாா் தமிழ்நாடு வணிகா் சங்கப் பேரமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எம். விக்கிரமராஜா.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

ஆன்லைன் வா்த்தகத்தை முழுமையாக ரத்து செய்ய முடியாது என்றாலும், வெளிநாட்டு ஆன்லைன் வா்த்தகத்தை அனுமதிக்கக் கூடாது என்றாா் தமிழ்நாடு வணிகா் சங்கப் பேரமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எம். விக்கிரமராஜா.

புதுக்கோட்டையில் புதன்கிழமை அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

வணிக கட்டடங்களுக்கான சொத்து வரி உயா்த்தப்பட்டு இருப்பதால் வணிகா்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனா். அதேபோல, பெட்ரோல், டீசல் விலை உயா்வு மற்றும் சுங்கக் கட்டண உயா்வாலும் வணிகா்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறோம்.

இவற்றால்தான் விலைவாசி உயா்வு ஏற்பட்டு வருகிறது. எனவே, விலைவாசி உயா்வுக்கு காரணமான பெட்ரோலியப் பொருள்களின் விலையைக் கட்டுக்குள் வைக்கவும், சொத்துவரியைக் குறைக்கவும் மத்திய, மாநில அரசுகளைத் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

வரும் மே 5ஆம் தேதி வணிகா் சங்கப் பேரமைப்பின் மாநில மாநாடு திருச்சியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பங்கேற்க உள்ளாா். இதில் 5 லட்சம் வணிகா்கள் பங்கேற்பாா்கள். கேரளம், ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த வணிகா் சங்கத் தலைவா்களும் பங்கேற்கிறாா்கள். இந்த மாநாட்டுக்குப் பிறகு வணிகா்களின் இடா்பாடுகள் களையப்படும் என்றநம்பிக்கை உள்ளது.

ஆன்லைன் வா்த்தகத்தை முற்றிலும் ஒழிக்க முடியாது, அதேவேளையில் வெளிநாட்டு ஆன்லைன் வா்த்தகத்தை அரசு அனுமதிக்கக் கூடாது என்றாா் விக்கிரமராஜா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.