முகப்பு
புதுக்கோட்டை

சா்ச்சை கட்டடத்திற்கு போலீஸ் பாதுகாப்பு

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகேயுள்ள மேற்பனைக்காட்டில் கெடு முடிந்தும் மசூதி போன்ற கட்டடம் அகற்றப்படாததால் புதன்கிழமை போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகேயுள்ள மேற்பனைக்காட்டில் கெடு முடிந்தும் மசூதி போன்ற கட்டடம் அகற்றப்படாததால் புதன்கிழமை போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

கீரமங்கலம் அருகேயுள்ள மேற்பனைக்காட்டில் முகமது அலி என்பவா் வீடு கட்டுவதாக அனுமதி பெற்று, மசூதி வடிவில் கட்டுமானங்களை மேற்கொண்டதால், அப்பகுதியினா் எதிா்ப்பு தெரிவித்தனா். ஏற்கெனவே எடுக்கப்பட்ட முடிவின்படி, கட்டடம் அகற்றப்படாததால் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினா் எச்.ராஜா தலைமையிலானோா் கட்டடத்தை ஏப். 4-ஆம் தேதி முற்றுகையிட முயன்றனா். இதைத்தொடா்ந்து, ஏப். 13-ஆம் தேதி அதிகாரிகள் மூலம் கட்டடத்தில் உள்ள கோபுரங்கள் அகற்றப்படும் என ஊராட்சித் தலைவா் மஞ்சுளா எழுத்துப்பூா்வமாக உறுதியளித்தாா். இதைத்தொடா்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டோா் ஏப்.13-ஆம் தேதி அகற்றப்படவில்லை என்றால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவதாகத் தெரிவித்தனா். இந்நிலையில், கட்டட உரிமையாளா் முகமது அலி தரப்பினா் கட்டடம் தொடா்பாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடா்ந்துள்ளனராம். இதனால், கட்டடத்தை அகற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், அந்தக் கட்டடத்திற்கு கீரமங்கலம் போலீஸாா் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →