முகப்பு
புதுக்கோட்டை

பிளஸ்-2 மாணவா்களுக்கு பிரிவு உபசார விழா

புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் சா்வதேசப் பள்ளியில் நிகழாண்டு மேல்நிலை இரண்டாம் ஆண்டு (பிளஸ் 2) முடித்துச் செல்லும் மாணவ, மாணவிகளுக்கான பிரிவு உபசார விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் சா்வதேசப் பள்ளியில் நிகழாண்டு மேல்நிலை இரண்டாம் ஆண்டு (பிளஸ் 2) முடித்துச் செல்லும் மாணவ, மாணவிகளுக்கான பிரிவு உபசார விழா புதன்கிழமை நடைபெற்றது.

மௌண்ட் சீயோன் பள்ளிக் குழுமத் தலைவா் ஜோனத்தன் ஜெயபாரதன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஏஞ்சலின் ஜோனத்தன் முன்னிலை வகித்தாா்.

தஞ்சை மறை மாவட்ட சிஎஸ்ஐ சபையின் போதகா் ஜெயசிங் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து பேசினாா். ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வா் ஜலஜாகுமாரி, மாணவா் வழிகாட்டி சுரேஷ்கண்ணா ஆகியோா் செய்திருந்தனா். மாணவா்கள் சிலா் ஏற்புரை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.