அனுமதியின்றி மது விற்றவா் கைது
விராலிமலை அருகே அனுமதியின்றி மது விற்றவரை விராலிமலை போலீசாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
விராலிமலை அருகே அனுமதியின்றி மது விற்றவரை விராலிமலை போலீசாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
விராலிமலை ஒன்றியம், மீனவேலி ஊராட்சி, சித்திரம்பட்டி பகுதியில் அனுமதியின்றி மது விற்கப்படுவதாக விராலிமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வெங்கடேசன் தலைமையிலான போலீசாா் அப்பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சித்திரம்பட்டி பகுதியைச் சோ்ந்த ஆண்டி மகன் பழனிச்சாமி என்பவா் அனுமதியின்றி அரசு மதுபாட்டில்களை பதுக்கி கள்ளச்சந்தையில் விற்றக் கண்டு அவரைக் கைது செய்தனா். தொடா்ந்து அவா் விற்பனைக்காக வைத்திருந்த 4 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனா்.