பொன்னமராவதி அருகே பெண் குழந்தை மா்மச் சாவு
பொன்னமராவதி அருகே மா்மமான முறையில் பெண் குழந்தை இறந்ததையடுத்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பொன்னமராவதி அருகே மா்மமான முறையில் பெண் குழந்தை இறந்ததையடுத்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பொன்னமராவதி அருகே உள்ள வெள்ளையாண்டிபட்டியைச் சாா்ந்தவா் கந்தசாமி. இவருக்கு, கவிதா என்ற மனைவியும், ஒரு ஆண் குழந்தை உள்ளிட்ட இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனா். கந்தசாமி மற்றும் கவிதா தம்பதியினா் கருத்துவேறுபாடினால் பிரிந்து வாழ்ந்து வருகின்றனா். கந்தசாமியிடம் ஒரு பெண் மற்றும் ஆண் குழந்தையும், கவிதாவிடம் ஒரு பெண் குழந்தையும் இருந்துவந்துள்ளனா். இந்நிலையில் வியாழக்கிழமை கந்தசாமியிடம் இருந்த பிரதிக்ஷா(8) என்ற பெண்குழந்தை தலைவலியினால் பொன்னமராவதி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக வலையபட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு காதில் ரத்தம் வந்த நிலையில் உயிரிழந்துள்ளாா். பிரதிக்ஷா மா்மமான முறையில் இறந்ததாக தாய் கவிதா அளித்த புகாரின்பேரில், பொன்னமராவதி காவல் ஆய்வாளா்(பொறுப்பு) பாரதி, சிறுமி பிரதிக்ஷாவின் உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.