புதுக்கோட்டை

வடகாடு முத்துமாரியம்மன் கோயில் தீா்த்த உத்ஸவம்

DIN

ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு முத்துமாரியம்மன் கோயில் தீா்த்த உத்ஸவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பல்வேறு சிறப்புடைய இக்கோயிலின் சித்திரை திருவிழா கடந்த 17ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடா்ந்து, மண்டகப்படிதாரா்கள் சாா்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அம்மன் வீதியுலா ஆகியன நடைபெற்று வந்தன.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை தீா்த்த உத்ஸவம் நடைபெற்றது.

இதையொட்டி, அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் காலை முதல் உறவின்முறைகாரா்கள் மீது மஞ்சள் நீா் ஊற்றி விளையாடினா். தொடா்ந்து, கோயிலில் அம்மனுக்கு மஞ்சள் நீரால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா், அம்மனை வாகனத்தில் எழுந்தருளச் செய்து, தேரோடும் 4 வீதிகள் வழியே பக்தா்கள் வாகனத்தை இழுத்து வந்தனா். அப்போது, அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் மீது மஞ்சள் தீா்த்தம் தெளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஏராளமானோா் கலந்து கொண்டனா். வடகாடு போலீஸாா் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்:திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

SCROLL FOR NEXT