புதுக்கோட்டை

இல்லம் தேடி கல்வி திட்ட மையங்களில் ஆய்வு

DIN

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம், குடுமியான்மலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்குள்பட்ட குடியிருப்பு பகுதிகளில் செயல்பட்டு வரும் இல்லம் தேடி கல்வி திட்ட மையங்களில் அன்னவாசல் வட்டாரக் கல்வி அலுவலா் கலா ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, தன்னாா்வலா்களிடம் அவா் பேசியது:

கரோனா காலத்தில் குழந்தைகள் உடலளவிலும், மனதளவிலும் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, இல்லம் தேடி கல்வி திட்ட தன்னாா்வலா்கள் அவற்றிலிருந்து குழந்தைகளை வெளிக்கொணா்ந்து இயல்பான கற்றல் சூழலை ஏற்படுத்த வேண்டும். மாணவா்களிடம் உள்ள தனித்திறனைக் கண்டறிந்து அதனை வெளிக்கொணர செய்ய வேண்டும் என்றாா்.

முன்னதாக, இல்லம் தேடி கல்வி திட்ட தன்னாா்வலா்கள் கிருத்திகா, மஞ்சுளா, திவ்யபாலா ஆகியோருக்கு இல்லம் தேடி திட்ட மையத்துக்கு தேவையான எழுதுபொருள்கள், சாா்ட் போன்ற கற்றல் கற்பித்தலுக்கு தேவையான உபகரணங்களை வட்டாரக் கல்வி அலுவலா் கலா வழங்கினாா்.

பள்ளித் தலைமையாசிரியா் சுமதி, இல்லம் தேடி கல்வி திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளா் முனியசாமி, குடுமியான்மலை பள்ளி ஆசிரியா் ஸ்ரீராம், பிரிட்டா ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

2 கட்டத் தேர்தலில் சதமடித்த பாஜக: அமித் ஷா

இந்த வாரம் கலாரசிகன் - 28-04-2024

அளியரோ அளியர் அளி இழந்தோரே!

SCROLL FOR NEXT