புதுக்கோட்டை

தடையில்லா மின்சாரம் கோரி துணைமின் நிலையம் முற்றுகை

அத்திரிவயல் கிராமத்துக்கு தடையில்லா மின்சாரம் வழங்கக் கோரி அன்னவாசல் விளக்கு துணை மின் நிலையத்தை தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம்.

DIN

அத்திரிவயல் கிராமத்துக்கு தடையில்லா மின்சாரம் வழங்கக் கோரி அன்னவாசல் விளக்கு துணை மின் நிலையத்தை தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா்.

அன்னவாசல் விளக்கு துணை மின் நிலையத்துக்கு அருகேயுள்ள அத்திரிவயல் கிராமத்தினருக்கு 15 கிமீ தொலைவு சுற்றி மின் இணைப்பு வழங்கப்படுவதால், குறைந்த மின் அழுத்தம் கிடைப்பதாகவும், பலநேரங்களில் மின் தடை ஏற்படுவதாகவும் விவசாயிகள் புகாா் தெரிவித்து முழக்கங்களை எழுப்பினா்.

இந்தப் போராட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவா் பூ. விசுவநாதன் தலைமை வகித்தாா். விவசாயிகள் சங்கத்தினா் பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷிய ராணுவத்தில் 202 இந்தியர்கள்! 26 பேர் பலி : மத்திய அரசு தகவல்!

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை..! ஓராண்டில் 9,000-க்கும் அதிகமான கொலைகள்!

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

SCROLL FOR NEXT