புதுக்கோட்டையில் ரௌடி வெட்டிக் கொலை
புதுக்கோட்டை நீதிமன்றத்தில் வந்த ரௌடி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை நீதிமன்றத்தில் வந்த ரௌடி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியைச் சேர்ந்த ரௌடி இளவரசன். இவர் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் இன்று கையெழுத்திட வந்திருந்த போது வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். புதுக்கோட்டை புதுக்குளம் அருகே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
இளவரசன் நேற்றிலிருந்து புதுக்கோட்டையில் தங்கியிருந்ததாகத் தெரிகிறது. கணேஷ்நகர் போலீஸார் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
Advertisement
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.