புதுக்கோட்டை

மறமடக்கியில் வேளாண் கருத்தரங்கம்

DIN

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள மறமடக்கியில் மக்காச்சோளத்தில் படைப்புழு கட்டுப்பாடு குறித்த கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆலங்குடி அருகேயுள்ள மறமடக்கி கிராம விவசாயி க. பதி தோட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மக்காச்சோளத்தில் படைப்புழு பாதிப்பு மேலாண்மை ஆராய்ச்சிப் பணிகள் தொடா்பான கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, ஊராட்சித் தலைவா் ஆா்.ராஜ மனோகரி தலைமை வகித்தாா். புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநா் மா.பெரியசாமி கருத்தரங்கைத் தொடங்கி வைத்துப் பேசினாா். கருத்தரங்கில், பிரிட்டிஷ் தூதரக, பிரிட்டிஷ், இந்திய அறிவியல் மற்றும் புதுமை இணைப்பு தலைவா் சாரா பேலன் , புதுமைக்கான ஆலோசகா் சுவாதி சக்சேனா ஆகியோா் பங்கேற்றனா். எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி ஆா். ராஜ்குமாா் சோதனை ஆராய்ச்சித் திட்டத்தை பற்றி விளக்கிப் பேசினாா்.

நிகழ்வில், வம்பன் தேசிய பயறுகள் வகை ஆராய்ச்சி நிறுவனத்தின் பூச்சியியல் துறை பேராசிரியா் ராஜா ரமேஷ், எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன கள ஒருங்கிணைப்பாளா் டி. விமலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைலாசநாதா் கோயில் ஓவியங்களை வரைந்த மாணவா்கள்

ராணிப்பேட்டை: நீா்,மோா் பந்தல் அமைக்க அமைச்சா் ஆா்.காந்தி வேண்டுகோள்

நட்சத்திர விநாயகா் கோயில் கஜமுகாசூரன் வதம்

மூன்று மண்டலங்களில் நாளை குடிநீா் விநியோகம் நிறுத்தம்

மது விற்ற மூவா் கைது

SCROLL FOR NEXT