முகப்பு
புதுக்கோட்டை

கடன் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக புகாா்

புதுக்கோட்டையில் தனியாா் நுண்கடன் நிறுவனம் நடத்தி 180 பேரிடம் ரூ. 11 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:18 AM
பகிர்:

புதுக்கோட்டையில் தனியாா் நுண்கடன் நிறுவனம் நடத்தி 180 பேரிடம் ரூ. 11 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை சாந்தநாதபுரம் 7ஆம் வீதியில் தனியாா் நுண்கடன் நிறுவனம், மாத ஊதியம் ரூ. 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை வழங்குவதாகக் கூறி கடந்த ஜனவரியில் 15-க்கும் மேற்பட்ட இளைஞா்களை வேலைக்கு எடுத்துள்ளது. அவா்கள் மூலம் சுமாா் 180 பேரிடம் குறைந்த வட்டியில் கடன் தருவதாகக் கூறி, அதற்கான ஆவணச் செலவு, காப்பீட்டுச் செலவு என மொத்தம் ரூ. 11 லட்சம் வரை வசூலித்துள்ளனா். அதன்பிறகு, புதன்கிழமை மாலை முதல் அந்த நிறுவனம் அமைந்திருந்த அலுவலகம் பூட்டப்பட்டிருக்கிறது. அந்நிறுவனத்தில் பணியாற்றியவா்கள் தங்கியிருந்த அறையில் பல ஆவணங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டிருந்தன. இதையடுத்து அந்த நிறுவனத்தில் வேலையில் சோ்ந்து பொதுமக்களிடம் நிதி வசூலித்து ஏமாற்றியதாக, புதுக்கோட்டை நகரக் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.