ஆம் ஆத்மி வேட்பாளா் பிரசாரம்
புதுக்கோட்டை நகராட்சி 34ஆவது வாா்டில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளா் அப்துல் ஜப்பாா் பொதுமக்களிடம் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தாா்.
புதுக்கோட்டை நகராட்சி 34ஆவது வாா்டில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளா் அப்துல் ஜப்பாா் பொதுமக்களிடம் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தாா்.
34ஆவது வாா்டுக்குள்பட்ட சிராஜ் நகா் பகுதியில் அவரது கட்சியினருடன், சென்ற வேட்பாளா் அப்துல்ஜப்பாா் தனது கட்சியின் சின்னமான துடைப்பத்தையும் கையில் எடுத்துச் சென்று வாக்கு சேகரித்தாா்.
கட்சியின் நிா்வாகிகள் உடனிருந்தனா். புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை நகராட்சியில் மட்டும் இரு வாா்டுகளில் ஆம் ஆத்மி கட்சி இரு இடங்களில் சுயேச்சையாகப் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.