கொன்னையூா் வெள்ளை விநாயகா் கோயிலில் குடமுழுக்கு விழா
பொன்னமராவதி அருகேயுள்ள கொப்பனாபட்டி வெள்ளை விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி அருகேயுள்ள கொப்பனாபட்டி வெள்ளை விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவின் தொடக்கமாக வியாழக்கிழமை கணபதி பூஜை மற்றும் மூன்றுகால யாகபூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, வெள்ளிக்கிழமை யாகபூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரை கும்பத்தில் ஊற்றி சிவாச்சாரியா்கள் குடமுழுக்கு செய்தனா்.
குடமுழுக்கு விழாவில், முன்னாள் தமிழக வீட்டுவசதி வாரியத் தலைவா் பிகே. வைரமுத்து மற்றும் திரளான பொதுமக்கள் பங்கேற்றனா். பாதுகாப்பு ஏற்பாடுகளை பொன்னமராவதி காவல்துறையினா் செய்திருந்தனா். விழா ஏற்பாடுகளை கொன்னையூா், மூலங்குடி நேசநாட்டு கருமறவா்கள் மற்றும் திருப்பணிக் குழுவினா் செய்திருந்தனா்.
Advertisement