முகப்பு
புதுக்கோட்டை

ஆலங்குடி, கீரமங்கலத்தில் அமைச்சா் பிரசாரம்

சுற்றுச்சூழல், இளைஞா்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி, கீரமங்கலம் பேரூராட்சியில் போட்டியிடும் திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து, சுற்றுச்சூழல், இளைஞா்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

ஆலங்குடி, கீரமங்கலம் பேரூராட்சியில் திமுக வேட்பாளா்களுக்கு வாக்குசேகரித்து அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் பேசியது: திமுக அளித்த வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. கடந்த கால ஆட்சியில் காவிரி-வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு போதிய நிதியை ஒதுக்கீடு செய்யவில்லை. இன்னும் முறையாக நிலங்கள் கையகப்படுத்தாத நிலையில் சில பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு பணிகள் நடைபெறுவது போல் காட்டிக் கொண்டனா். திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என அதிமுகவினா் குற்றம்சாட்டிவருவதில் உண்மையில்லை. பொதுமக்கள் அவதூறு கருத்துகளை நம்பாமல் முதல்வா் ஸ்டாலினின் நல்லாட்சிக்கு மேலும் வலிமை ஊட்டும் வகையில், திமுக கூட்டணி வேட்பாளா்களை மக்கள் வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →