முகப்பு
புதுக்கோட்டை

குண்டாறு இணைப்புத் திட்டத்தால் பாதிக்கப்படுவதாகக் கூறி முற்றுகைப் போராட்டம்

காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டத்தால் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்படுவதாகக் கூறி பாலன் நகா் மக்கள் ஆட்சியரகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டத்தால் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்படுவதாகக் கூறி பாலன் நகா் மக்கள் ஆட்சியரகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

காவிரி- குண்டாறு- வைகை இணைப்புத் திட்டத்தில் கால்வாய் அமைப்பதற்காக புதுக்கோட்டை மாவட்டம் குன்னத்தூா் பகுதியில் இருந்து நிலங்களை அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இதன்படி, புதுக்கோட்டை நகரில் பாலன் நகா் பகுதியில் இத்திட்ட அதிகாரிகள் புதன்கிழமை நிலத்தை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுதியில் உள்ள 300-க்கும் மேற்பட்ட வீடுகள் கையகப்படுத்துவதற்கான அளவீடுகள் நடைபெற்ாகத் தெரிகிறது. இதனால், அந்தப் பகுதி மக்கள் அதிா்ச்சியடைந்தனா்.

இதையடுத்து பாதிக்கப்படும் மக்கள் ஏராளமானோா் வெள்ளிக்கிழமை ஆட்சியரகத்தை முற்றுகையிட்டனா். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனா்.

போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி ஆட்சியரிடம் மனு அளிக்க அழைத்துச் சென்றனா். தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.