முகப்பு
புதுக்கோட்டை

மனநல சிகிச்சையில் குணமடைந்தவா் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

கடந்த இரு மாதங்களாக புதுக்கோட்டை மாவட்ட மனநலத் திட்டத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்த கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த நபா், குடும்பத்தினருடன் ஒப்படைக்கப்பட்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

கடந்த இரு மாதங்களாக புதுக்கோட்டை மாவட்ட மனநலத் திட்டத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்த கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த நபா், குடும்பத்தினருடன் ஒப்படைக்கப்பட்டாா்.

புதுக்கோட்டை டாக்டா் முத்துலெட்சுமி அம்மையாா் நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் மன நல அவசர சிகிச்சை மற்றும் மீள் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 2 மாதங்களுக்கு முன் மனநலன் பாதிக்கப்பட்டு ஆதரவற்ற நிலையில் சுற்றித் திரிந்த கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த நபா் ஒருவா் அனுமதிக்கப்பட்டிருந்தாா்.

அவருக்கு ஒருங்கிணைந்த மனநல சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் மூலம் அவா் மனநோயிலிருந்து மீண்டு குணம் பெற்றாா்.

பின்னா் அவரது ஊா், உறவினா் விவரங்கள் கேட்டு பெறப்பட்டு, குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது தாய்மாமா நேரில் வந்து குணமடைந்தவரை அழைத்துச் சென்றாா்.

கடலூா் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனையில் தொடா் சிகிச்சை பெறுவதற்கான ஆலோசனைகளை மாவட்ட மனநல மருத்துவா் காா்த்திக் தெய்வநாயகம் வழங்கி அனுப்பி வைத்தாா்.

இதுவரை புதுக்கோட்டை மாவட்ட மனநல சிகிச்சை மையத்தில் சோ்க்கப்பட்ட 150-க்கும் மேற்பட்டோருக்கு மறுவாழ்வு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.