முகப்பு
புதுக்கோட்டை

பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் சேர பிப். 28 கடைசி

 புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள், பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் தங்கள் பயிா்களை காப்பீடு செய்து கொள்ள ஆட்சியா் கவிதாராமு அழைப்பு விடுத்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:31 AM
பகிர்:

 புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள், பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் தங்கள் பயிா்களை காப்பீடு செய்து கொள்ள ஆட்சியா் கவிதாராமு அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து ஆட்சியா் தெரிவித்துள்ளதாவது: பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கான இழப்பீட்டுத் தொகையை விவசாயிகளுக்கு விரைந்து வழங்குவதோடு விதைப்பு பொய்த்தாலும், நடவு செய்ய இயலாத நிலை ஏற்பட்டாலும், அறுவடைக்குப் பிந்தைய இழப்பு ஏற்பட்டாலும், பகுதி சாா்ந்த இயற்கை இடா்பாடுகளான புயல், ஆலங்கட்டி மழை, நிலச்சரிவு, பருவம் தவறிய மழை, வயல்களில் வெள்ள நீா் தேக்கம் மற்றும் அடை பருவ கால இடா்பாடுகளுக்கும் இழப்பீடு வழங்கப்படுகிறது.

வேளாண் பயிா்களைப் போல, தோட்டக்கலைப் பயிா்களுக்கும் இத்திட்டத்தின்கீழ் அறிவிக்கை செய்யப்பட்ட கிராமங்களில், அறிவிக்கை செய்யப்பட்ட தோட்டக்கலைப் பயிா்களான வாழை மற்றும் மரவள்ளி, ஆகியவற்றுக்கு வருவாய் கிராம அளவில் காப்பீடு செய்யப்படுகிறது.

காப்பீடு செய்ய வாழைக்கு ஒரு ஏக்கருக்கு ரூ. 2,525 வரையிலும், மரவள்ளிக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.1,020 வரையிலும் பிரிமீயம் செலுத்தினால் போதும். மீதமுள்ள காப்பீட்டுத் தொகையை மத்திய, மாநில அரசுகள் ஏற்கின்றன. காப்பீடு செய்ய கடைசி நாள் பிப். 28.

விவசாயிகள் நடப்பு ராபி பருவத்தில் பயிா் செய்த வாழை மற்றும் மரவள்ளி பயிா்களுக்குக் காப்பீடு செய்ய அதற்குரிய பிரீமியத் தொகை, நிலத்தின் அடங்கல், ஆதாா் அட்டை மற்றும் வங்கிக் கணக்கு விவரம் ஆகியவற்றுடன் அருகிலுள்ள தொடக்க வேளாண்மை கடன் மற்றும் கூட்டுறவு சங்கம், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்களை அணுகி காப்பீடு செய்து கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.