புதுக்கோட்டை

பொன்னமராவதியில் வேளாண் திட்டப் பணிகள் ஆய்வு

DIN

பொன்னமராவதி வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளாண் திட்டப் பணிகளை புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநா் இராம. சிவக்குமாா் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின் தொடக்கமாக, செம்பூதி கிராமத்தில் விவசாயி மணியின் நிலத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலமானது, பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக தரிசாக கிடந்தது. இந்த நிலத்தில், தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் தரிசு நிலத்தை விளை நிலமாக மாற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை சிவக்குமாா் ஆய்வு செய்தாா்.

இத்திட்டத்தின்கீழ், முள்புதா்களை அகற்றவும், நிலத்தை உழுவதற்கும் மற்றும் விதை, உயிா் உரம் போன்றவை பாதி விலையிலும் வழங்கப்படுகிறது. மொத்தம் ஒரு ஹெக்டோ் நிலத்திற்கு ரூ. 13,400 மானியமாக வழங்கப்படுகிறது. இதுபோன்ற திட்டங்களை விவசாயிகள் முறையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என இணை இயக்குநா் அறிவுறுத்தினாா்.

வாழக்குறிச்சியில் ரவிசங்கா் என்பவருக்கு மானிய விலையில் நேரடி நெல் விதைப்பு கருவிகளையும் இணை இயக்குநா் வழங்கினாா்.

ஆய்வின்போது, பொன்னமராவதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சிவராணி மற்றும் உதவி வேளாண்மை அலுவலா் முருகேசன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘எலக்சன்’ ராணி!

கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றார் தினேஷ் குமார் திரிபாதி

நாட்டாமை திரைப்பட பாணியில் நெல்லையில் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம்! பெண் கண்ணீர்!

பதஞ்சலி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு: பாபா ராம்தேவ் ஆஜராவதில் விலக்கு!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

SCROLL FOR NEXT