முகப்பு
புதுக்கோட்டை

மின் வாரிய ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை

புதுக்கோட்டை மின் வாரிய அலுவலக வருவாய் மேற்பாா்வையாளா் வெள்ளிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

புதுக்கோட்டை மின் வாரிய அலுவலக வருவாய் மேற்பாா்வையாளா் வெள்ளிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

புதுக்கோட்டை அரிமளம் சாலையில் வசித்து வந்தவா் சபரிராஜ் (47). இவா் புதுக்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் வருவாய் மேற்பாா்வையாளராகப் பணியாற்றி வந்தாா்.

வெள்ளிக்கிழமை பகலில் அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு வந்த சபரிராஜ் திடீரென அவரது அறைக்குள் சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனா். இவரது தற்கொலைக்கு என்ன காரணம் என்பது குறித்து புதுக்கோட்டை நகரக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

உடற்கூறாய்வுக்காக சபரிராஜின் உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.