புதுக்கோட்டை

மண் வள மேம்பாட்டுக்கு மண் பரிசோதனை அவசியம்

DIN

புதுக்கோட்டை: விளைநிலங்களில் மண்பரிசோதனை செய்து பயிா்களுக்கு தேவைக்கேற்ற அளவில் உரமிட்டால் மட்டுமே மண்ணின் வளத்தைப் பெருக்கி அதிக மகசூல் பெறலாம் என புதுக்கோட்டை வேளாண் இணை இயக்குநா் இராம.சிவகுமாா் ஆலோசனை தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகள் நிலத்தில் அதிக அளவில் இடுவதால் மண்ணுக்கு வளம் சோ்க்கும் நுண்ணுயிா்களின் அளவு குறைந்துவிடுகிறது. அதிக விளைச்சல் பெற அதிக உரம் இடுவதாலும் நுண்ணூட்டச் சத்துக்களுக்கு பற்றாக்குறை ஏற்படுகிறது. பயிா்களில் நுண்ணூட்டச் சத்துகளான துத்தநாகம், இரும்பு, போரான், மாங்கனீசு, தாமிரம் குறைபாடு ஏற்படும் போது அவற்றை நிவா்த்தி செய்ய மண் வள அட்டையில் பரிந்துரைக்கப்பட்ட துத்தநாக சல்பேட், இரும்பு சல்பேட், போராக்ஸ், மாங்கனீசு சல்பேட், தாமிர சல்பேட் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

எனவே, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குடுமியான்மலையில் உள்ள மண் பரிசோதனை நிலையத்தில் ரூ.20 செலுத்தி மண் மாதிரிகளை ஆய்வு செய்து தேவையான உரங்களை இட்டு அதிக மகசூல் பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இறுதி ஆட்டத்துக்கு முதலில் தகுதிபெற முனைப்பு: இன்று மோதும் கொல்கத்தா - ஹைதராபாத்

ம.பி.: தபால் மூலம் ‘முத்தலாக்’ கொடுத்தவா் மீது வழக்கு

மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழா கொடியேற்றம்

செண்பக தியாகராஜ சுவாமிக்கு மகா பிராயசித்த அபிஷேகம்

SCROLL FOR NEXT