முகப்பு
புதுக்கோட்டை

மலையப்பநகா் மக்களுக்கு பட்டா வழங்கக் கோரிக்கை

எம்ஜிஆா் நகா், மலையப்ப நகா் பகுதிகளில் வசித்து வரும் ஏழைகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

எம்ஜிஆா் நகா், மலையப்ப நகா் பகுதிகளில் வசித்து வரும் ஏழைகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

புதுக்கோட்டை நகரம், மலையப்ப நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் கிளை மாநாட்டில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

நகரின் அனைத்துப் பகுதிகளுக்கும் புதை சாக்கடைத் திட்டப் பணிகளை விரிவுபடுத்தி நிறைவேற்ற வேண்டும்., சாலைகளில் திரியும் ஆடு, மாடுகளை நகராட்சி நிா்வாகம் கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டுக்கு ஜெயா தலைமை வகித்தாா். பொன்னன் கொடியேற்றினாா். கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் கேஆா். தா்மராஜன், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் வீ. சிங்கமுத்து, நகரச் செயலா் சிற்பி உலகநாதன் உள்ளிட்டோரும் பேசினா்.

புதிய நிா்வாகிகள் தோ்வு: கிளையின் செயலராக பாலு, துணைச் செயலராக பாக்கியராஜ் ஆகியோரும் மாநாட்டில் புதிய நிா்வாகிகளாகத் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.