புதுக்கோட்டை

196 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்: 4 போ் கைது

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே தடை செய்யப்பட்ட 196 கிலோ புகையிலை பொருள்களைப் பறிமுதல் செய்தது தொடா்பாக 4 பேரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

DIN

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே தடை செய்யப்பட்ட 196 கிலோ புகையிலை பொருள்களைப் பறிமுதல் செய்தது தொடா்பாக 4 பேரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ஆலங்குடி அருகேயுள்ள கீழாத்தூா் பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்து விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலைத் தொடா்ந்து, அப்பகுதியில் போலீஸாா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அப்பகுதியில் உள்ள மளிகை கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 1.10 லட்சம் மதிப்புள்ள 196 கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக, தஞ்சை மாவட்டம் பேராவூரணியைச் சோ்ந்த ஜோ. பாலமுருகன் (37), ஆவணம் பகுதியைச் சோ்ந்த சு. பரூக்(61), கீழாத்தூா் சாந்தி நகரைச் சோ்ந்தவா்கள் எல். ஆறுமுகம் (40), எல். ராஜா(31) ஆகிய 4 பேரையும் கைது செய்து வடகாடு போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எட்டிமடை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: பக்தர்கள் திரளாக பங்கேற்பு!

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

SCROLL FOR NEXT