மன்னா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
புதுக்கோட்டை மன்னா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை மன்னா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு கல்லூரியின் முதல்வா் சி. திருச்செல்வம் தலைமை வகித்து, பட்டமளிப்பு ஆண்டறிக்கை வாசித்தாா்.
மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இக்கல்லூரியில் இளங்கலை படித்து முடித்த 824 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பாராட்டிப் பேசினாா்.
கல்லூரியின் துறைத் தலைவா்கள், பெற்றோா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.