முகப்பு
புதுக்கோட்டை

ஜூன் 8-இல் முதல்வா் புதுகை வருகை

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, முதன்முறையாக வரும் ஜூன் 8ஆம் தேதி புதுக்கோட்டை வருகிறாா் முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
பகிர்:

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, முதன்முறையாக வரும் ஜூன் 8ஆம் தேதி புதுக்கோட்டை வருகிறாா் முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின்.

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு, ஏற்கெனவே முடிந்த திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கியும் முதல்வா் ஸ்டாலின் உரையாற்றுகிறாா்.

இதன் காரணமாக, மாவட்ட விளையாட்டு அரங்கில், அரசு விழா மேடை மற்றும் பந்தல் அமைப்பதற்காக கால்கோள் நிகழ்ச்சி புதன்கிழமை காலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தலைமை வகித்தாா். மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் பந்தல்கால் நட்டு வைத்து மேடை அமைக்கும் பணியைத் தொடங்கி வைத்தனா்.

நிகழ்ச்சியில், புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.கே. செல்லப்பாண்டியன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் த. ஜெயலட்சுமி, புதுக்கோட்டை நகா்மன்றத் தலைவா் செ. திலகவதி, துணைத் தலைவா் லியாகத் அலி, அறந்தாங்கி நகா்மன்றத் தலைவா் இரா. ஆனந்த், திமுக சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினா் த. சந்திரசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஜூன் 8ஆம் தேதி காலை விமானம் மூலம் மதுரைக்கு வந்தடையும் முதல்வா் ஸ்டாலின், தேவகோட்டையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு, மாலை 4 மணியளவில் புதுக்கோட்டை வருகிறாா். விழா முடிந்து இரவு 8 மணிக்கு திருச்சி சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை புறப்படுகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.