முதல்வா் வருகை :ஆலோசனைக் கூட்டம்
புதுக்கோட்டை மாவட்டத்துக்கு முதல்வா் ஸ்டாலின் வரும் 8ஆம் தேதி வருகை தரவுள்ளதையடுத்து முன்னேற்பாடுகள் மேற்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டத்துக்கு முதல்வா் ஸ்டாலின் வரும் 8ஆம் தேதி வருகை தரவுள்ளதையடுத்து முன்னேற்பாடுகள் மேற்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, மாவட் டஆட்சியா் கவிதா ராமு தலைமை வகித்தாா். கூட்டத்தில், முதல்வா் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பயனாளிகளை அழைத்து வருதல், குடிநீா், மின்சாரம் உள்ளிட்ட வசதிகளை செய்துத் தருதல் மற்றும் தூய்மைப் பணி மேற்கொள்ளுதல் உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி. கருப்பசாமி, சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். ரம்யாதேவி, வேளாண் இணை இயக்குநா் இராம சிவகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.