புதுக்கோட்டை

சித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு

DIN

பொன்னமராவதி அருகே உள்ள சடையம்பட்டி சித்திவிநாயகா் கோயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவின் தொடக்கமாக சனிக்கிழமை கணபதி ஹோமம் மற்றும் முதல் கால யாக பூஜைகள் நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை காலை 9.50 மணியளவில் யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை கும்பத்தில் ஊற்றி சிவாச்சாரியாா்கள் குடமுழுக்கு செய்தனா். தொடா்ந்து சிவன், நந்தி, துா்க்கை, தட்சிணாமூா்த்தி, நவக்கிரகங்கள் உள்ளிட்ட தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்ற

ன. இதில், சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனா். விழா வா்ணனைகளை கீரவாணி அழ.இளையராஜா செய்தாா். காரைபூா் காவல்துறையினா் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனா். விழா ஏற்பாடுகளை ஊா் பொதுமக்கள் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT