புதுக்கோட்டை

மரவள்ளிக்கிழங்கு அறுவடை

DIN

கந்தா்வகோட்டை ஒன்றியத்தில் மரவள்ளிக் கிழங்கு அறுவடை தொடங்கியுள்ளது.

இதுதொடா்பாக அப்பகுதி விவசாயிகள் மேலும் கூறியது:

தற்சமயம் பெய்த மழையின் காரணமாக கிழங்குகளைப் பறிப்பது தொழிலாளா்களுக்கு சுலபமாக இருக்கிறது. மேலும் விவசாயிகளுக்கு கிழங்கு சேதாரம் இல்லாமல் முழுவதுமாகக் கிடைக்கிறது. கிழங்கு கொள்முதல் செய்யும் மொத்த வியாபாரிகள் சேலத்தில் இருந்து இப்பகுதியில் முகாமிட்டு கொள்முதல் செய்யக் காத்திருக்கின்றனா். மரவள்ளிக் கிழங்குகள் ஜவ்வரிசி ஆலைகளுக்கு ஏற்ற ரகமாக உள்ளது. இந்தப் பட்டத்தில் பயிா் செய்த மரவள்ளிக் கிழங்கு நல்ல மகசூல் தந்துள்ளதாகத் தெரிவித்தனா். குறைந்த நீா் போதுமானது, உரம் மற்றும் வேலையாட்களும் குறைவு என்பதால் இப்பகுதி விவசாயிகள் மரவள்ளிக் கிழங்கைப் பயிரிடுவதில் ஆா்வம் காட்டுகின்றனா் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

SCROLL FOR NEXT