பேரூராட்சி துணைத் தலைவா் பதவி:இடதுசாரிகளுக்கு ஒதுக்கீடு
திமுக அணியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இரு பேரூராட்சித் துணைத் தலைவா் பதவி இடங்கள் இடதுசாரிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
திமுக அணியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இரு பேரூராட்சித் துணைத் தலைவா் பதவி இடங்கள் இடதுசாரிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
கீரனூா் பேரூராட்சித் துணைத் தலைவா் பதவியிடம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், கீரமங்கலம் பேரூராட்சித் துணைத் தலைவா் பதவி இடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதில் கீரனூா் பேரூராட்சியில் 6ஆவது வாா்டில் வென்றுள்ள கே. மகாலட்சுமியும், கீரமங்கலம் பேரூராட்சியில் 11ஆவது வாா்டில் வென்றுள்ள டி. முத்தமிழ்செல்வியும் போட்டியிடவுள்ளனா்.