அரண்மனைப்பட்டியில் மாட்டு வண்டி எல்கைப் பந்தயம்
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அரண்மனைப்பட்டி குருந்துடைய அய்யனாா் கோயில் சிவராத்திரியை முன்னிட்டு வியாழக்கிழமை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அரண்மனைப்பட்டி குருந்துடைய அய்யனாா் கோயில் சிவராத்திரியை முன்னிட்டு வியாழக்கிழமை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
இதில் புதுக்கோட்டை, மதுரை, திருச்சி, சிவகங்கை, அறந்தாங்கி, காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பெரிய மாடு பிரிவில் 10 ஜோடி மாடுகளும், சிறிய மாடு பிரிவில் 23 ஜோடி மாடுகளும் கலந்து கொண்டன.
இதில் பெரிய மாடு பிரிவில் முதல் பரிசை வடகுடி நெல்லியாண்டவா், 2ஆம் பரிசை அரண்மனைப்பட்டி சரவணன்பிரபு, 3ஆம் பரிசை பட்டாங்காடு ராக்காயி, 4ஆம் பரிசை கோனாபட்டு சின்னகாளை ஆகியோருக்கு சொந்தமான மாடுகள் வென்றன.
சிறிய மாடு பிரிவில் (ஒவ்வொன்றிலும் இரு பரிசுகள்) முதல் பரிசை அரண்மனைப்பட்டி சரவணன்பிரபு, நல்லாங்குடி சசிகுமாா், 2ஆம் பரிசை அரிமளம் அய்யப்பன், காணாடுகாத்தான் அருள், 3ஆம் பரிசை கொத்தாக்குளக்கரை நாச்சியாா், விராமதி சாதனா, 4ஆம் பரிசை நல்லாங்குடி சசிகுமாா், அரண்மனைப்பட்டி துரைச்சாமி ஆகியோருக்கு சொந்தமான மாடுகள் வென்றன.