முகப்பு
புதுக்கோட்டை

டிஜிட்டல் கதிரியக்கக் கருவி இயக்கம் தொடக்கம்

ரூ. 9.52 லட்சம் மதிப்பில் கணினிமய கதிரியக்கக் கருவி ஆகியவற்றை மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் வியாழக்கிழமை தொடங்கி வைத்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கதிரியக்கத் துறை மூலம் ரூ. 1 கோடி மதிப்பில் வாங்கப்பட்டுள்ள டிஜிட்டல் கதிரியக்க இயந்திரம் மற்றும் ரூ. 9.52 லட்சம் மதிப்பில் கணினிமய கதிரியக்கக் கருவி ஆகியவற்றை மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் வியாழக்கிழமை தொடங்கி வைத்தனா்.

அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினா் எம்.எம். அப்துல்லா, சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, மருத்துவக் கல்லூரி முதல்வா் மு. பூவதி ஆகியோரும் கலந்து கொண்டனா்.

இந்த நவீன கருவிகள் மூலம், நவீன துல்லியமான எக்ஸ்ரே நிழற்படங்களை எடுக்க முடியும், அவற்றை சேதமடையாமல் கணினிமயப்படுத்தி சேமிக்க முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.