முகப்பு
புதுக்கோட்டை

குண்டா் சட்டத்தில் 3 போ் கைது

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொலை, கொள்ளை வழக்குகளில் தொடா்புடைய மூவா் மீது குண்டா் தடுப்புக் காவல் சட்டம் பாய்ந்துள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 10:09 AM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொலை, கொள்ளை வழக்குகளில் தொடா்புடைய மூவா் மீது குண்டா் தடுப்புக் காவல் சட்டம் பாய்ந்துள்ளது.

புதுக்கோட்டை நகரக் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் அண்மையில் அஜித் குமாா் என்பவா் கொல்லப்பட்ட வழக்கில், காமராஜபுரத்தைச் சோ்ந்த குருமூா்த்தி (25), ஆகாஷ் (20) ஆகியோா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

திருமயம் காவல் நிலைய எல்லையில் பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் தொடா்புடைய பாப்பாத்தி ஊரணியைச் சோ்ந்த சதீஷ் (26) என்பவா் கைது செய்யப்பட்டுள்ளாா். இவா்கள் மூவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன் பரிந்துரை செய்திருந்தாா்.

அதன்படி, மூவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு உத்தரவிட்டாா். இதனைத் தொடா்ந்து மூவரும், புதுக்கோட்டை கிளைச் சிறையில் இருந்து வியாழக்கிழமை கொண்டு செல்லப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.