புதுக்கோட்டை

மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணா்வுப் பேரணி

மாற்றுத்திறன் கொண்ட மாணவ - மாணவிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் தொடா்பான விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

மாற்றுத்திறன் கொண்ட மாணவ - மாணவிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் தொடா்பான விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

கந்தா்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளதை மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இருந்து கடைவீதி வழியாக மாணவ -மாணவிகள் வியாழக்கிழமை பேரணியாகச் சென்று விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். பேரணியை ஊராட்சி மன்றத் தலைவா் சி.தமிழ்ச்செல்வி தொடங்கிவைத்தாா். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை விஜயலட்சுமி முன்னிலை வகித்தாா். பேரணியில் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் அவசியம் கல்வி கற்க வேண்டும், மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான மதிப்பீட்டு முகாமில் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் எனவும் முழக்கங்கள் எழுப்பினா். முகாமிற்கு வரும்போது தவறாமல் கடவுச்சீட்டு அளவு புகைப்படம், மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை, ஆதாா் அட்டை எடுத்து வரவேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT