முகப்பு
புதுக்கோட்டை

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.81 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவி

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:43 AM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.81 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை சுற்றுச்சூழல், இளைஞா்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் வியாழக்கிழமை வழங்கினாா்.

ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சாா்பில் ஆட்சியா் கவிதாராமு தலைமையில் நடைபெற்ற மருத்துவ மதிப்பீட்டு முகாமில், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் பேசினாா்.

நிகழ்வில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி.சத்தியமூா்த்தி, திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவா் வள்ளியம்மை தங்கமணி, ஆலங்குடி பேரூராட்சித் தலைவா் ராசி முருகானந்தம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் உலகநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →