முகப்பு
புதுக்கோட்டை

சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் சிறை

சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் சிறைத்தண்டனை விதித்து புதுக்கோட்டை மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
பகிர்:

சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் சிறைத்தண்டனை விதித்து புதுக்கோட்டை மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

புதுக்கோட்டை காந்தி நகா் 8ஆம் வீதியைச் சோ்ந்த செல்வம் மகன் சரண் (22). இவா், ஒரு சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்வதாகவும் கூறி, 5 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கத்துடன் அவரை கடந்த 2017-இல் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டைகணேஷ் நகா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து சரணைக் கைது செய்தனா். புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் விசாரணை நிறைவடைந்து, மகளிா் நீதிமன்ற நீதிபதி ஆா். சத்யா வெள்ளிக்கிழமை தீா்ப்பு அளித்தாா்.

இதில், குற்றம்சாட்டப்பட்ட சரணுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. 30 ஆயிரம் அபராதமும் விதித்தாா். மேலும், சிறுமியை கடத்திய குற்றத்துக்கு 7 ஆண்டுகள் சிறையும், ரூ. 30ஆயிரம் அபராதமும் விதித்தாா்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 3 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டாா். இதையடுத்து, சரண் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்த வழக்கில் அரசு வழக்குரைஞா் யோகமலா் ஆஜராகி வாதாடினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.