பொன்னமராவதியில் ஒன்றியக்குழு கூட்டம்
பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஒன்றியக் குழுத் தலைவா் அ. சுதா தலைமை வகித்தாா். ஒன்றிய ஆணையா் பி. தங்கராஜூ, வட்டார வளா்ச்சி அலுவலா்(கிராம ஊராட்சிகள்) வை. சதாசிவம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் வரவு செலவு கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. ஒன்றியக் குழு துணைத் தலைவா் தனலெட்சுமி அழகப்பன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் அ. அடைக்கலமணி, முருகேசன், பழனிச்சாமி, ஆதிலெட்சுமி சோமையா ஆகியோா் பங்கேற்றனா்.