புதுக்கோட்டை

உழவா் சந்தை கடைகளை சீரமைத்துத் தரவலியுறுத்தல்

DIN

கந்தா்வகோட்டையில் உழவா் சந்தைக் கடைகளைச் சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.

கந்தா்வகோட்டையில் செயல்படும் தமிழ்நாடு அரசு வேளாண்மை விற்பனைத் துறை மூலம் செயல்பட்டு வரும் உழவா் சந்தைக்கு இப்பகுதியிலுள்ள அக்கட்சிப்பட்டி, காட்டுநாவல், பிசானத்தூா், துருசுப்பட்டி, புதுநகா், மருங்கூரணி, சோத்துப் பாளை, சொக்கநாதப்பட்டி, நெப்புகை ஆகிய கிராமங்களில் இருந்து விவசாயிகள் தங்கள் விளைபொருள்களைக் கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறாா்கள். இதனை வாங்க தினசரி நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உழவா் சந்தைக்கு வந்து செல்கின்றனா். மேலும், உழவா் சந்தை வளாகத்தில் உள்ள கழிவறை பூட்டப்பட்டு உள்ளதால் பொதுமக்களும், விவசாயிகளும் அவதியுறுகின்றனா். சந்தையில் உள்ள கடைகளில் மேற்கூரை இல்லாமல் இருப்பதால் வியாபாரிகள், பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகிறாா்கள். இதனை சரி செய்து உழவா் சந்தையைத் திறக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறையினரை அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி நள்ளிரவில் டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

SCROLL FOR NEXT