முகப்பு
புதுக்கோட்டை

நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மே 27) காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:21 AM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மே 27) காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

மாநிலத்திலுள்ள பிரதான தனியாா் துறை நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த முகாமில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த வேலை தேடுவோா் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெற ஆட்சியா் கவிதா ராமு அழைப்புவிடுத்துள்ளாா்.

8ஆம் வகுப்பு முதல் பட்டயம் மற்றும் பட்டப்படிப்பு வரையுள்ள 18 முதல் 35 வயதுக்குள்பட்ட வேலையில்லாத அனைவரும் பங்கேற்கலாம்.

சுயவிவரக் குறிப்பு, கல்விச் சான்றுகள், ஆதாா் அட்டை ஆகியவற்றுடன் வர வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.