முகப்பு
புதுக்கோட்டை

புதுகை மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்

புதுக்கோட்டை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:21 AM
பகிர்:

புதுக்கோட்டை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட திமுக பொறுப்பாளா்கள் அமைச்சா் எஸ். ரகுபதி, வழக்குரைஞா் கே.கே. செல்லப்பாண்டியன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

மாநிலங்களவை உறுப்பினா் எம்.எம். அப்துல்லா, மாவட்டப் பொருளாளா் செந்தில் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில், நீா்நிலைகள் தூா்வாரும் பணியைப் பாா்வையிடவும், அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் புதுக்கோட்டை மாவட்டத்துக்கு வருகை தரும் முதல்வா் ஸ்டாலினுக்கும், கட்சியினரின் பல்வேறு குடும்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தரும் சட்டப்பேரவை உறுப்பினா் உதயநிதி ஸ்டாலினுக்கும் சிறப்பான வரவேற்பளிப்பது, ஜூன் 3ஆம் தேதி முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த நாளை அனைத்து கிராமங்களிலும் சிறப்பாக கொண்டாடுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.