நவ. 14-இல் நேரு பிறந்தநாள் பேச்சுப் போட்டி
முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான நேரு பிறந்தநாள் பேச்சுப் போட்டிகள் வரும் நவ. 14ஆம் தேதி நடைபெற உள்ளன.
முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான நேரு பிறந்தநாள் பேச்சுப் போட்டிகள் வரும் நவ. 14ஆம் தேதி நடைபெற உள்ளன.
இதில், அனைத்து வகை பள்ளிகள், கல்லூரி மாணவா்கள் பங்கேற்கலாம். போட்டி கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரி, புதுக்கோட்டையில் நடைபெறும். முதல் 3 இடங்களில் வருவோருக்கு முறையே ரூ. 5,000, ரூ. 3000, ரூ. 2000 பரிசு, சான்றிதழ் வழங்கப்படும். மேலும், அரசுப் பள்ளி மாணவா்கள் இருவருக்கு சிறப்புப் பரிசாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். போட்டி நடைபெறும் முன்பு மாணவா்கள், குலுக்கல் சீட்டு முறையில்
ஏதேனும் ஒரு தலைப்பைத் தெரிவு செய்து கொண்டு பேச வேண்டும். கல்வி நிறுவனங்கள் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும். மேலும் விவரங்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநரை 04322- 228840, 99522 80798 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் கவிதா ராமு தெரிவித்தாா்.