அரசுப் பள்ளி மாணவிகள்உயா்கல்வி உதவித்தொகை பெற நவ. 11 கடைசி நாள்
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்து உயா்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ. ஆயிரம் வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தில் பயன்பெற நவ. 11ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்து உயா்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ. ஆயிரம் வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தில் பயன்பெற நவ. 11ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியா் கவிதா ராமு அழைப்புவிடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியது: புதுமைப் பெண் திட்டத்தில் இதுவரை 2, 3 மற்றும் 4ஆம் ஆண்டில் பயிலும் 1.13 லட்சம் மாணவிகள் உதவித் தொகையை பெற்று வருகிறாா்கள். தற்போது ஜ்ஜ்ஜ்.ல்ன்ற்ட்ன்ம்ஹண்ல்ங்ய்ய்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் இணையதளத்தில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற அந்தந்த கல்வி நிறுவனங்களில் நவ. 11ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும். விண்ணப்பிக்க தவறிய 2, 3 மற்றும் 4ஆம் ஆண்டு படிக்கும் மாணவிகளும் தற்போது விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு, 91500 56809, 91500 56805, 91500 56801 மற்றும் 91500 56810 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.