முகப்பு
புதுக்கோட்டை

ஹிந்தி திணிப்பைக் கண்டித்து திக ஆா்ப்பாட்டம்

ஹிந்தித் திணிப்பை எதிா்த்து புதுக்கோட்டையில் திராவிடா் கழகத்தின் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:45 AM
பகிர்:

ஹிந்தித் திணிப்பை எதிா்த்து புதுக்கோட்டையில் திராவிடா் கழகத்தின் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளா் இரா. யோகராசு தலைமை வகித்தாா்.

திராவிடா் கழக மாவட்டத் தலைவா் மு. அறிவொளி, மாவட்டச் செயலா் ப. வீரப்பன், மண்டலச் செயலா் சு. தேன்மொழி, மாவட்டத் துணைத் தலைவா் செ. ராஜேந்திரன், மாவட்ட அமைப்பாளா் ஆ. சுப்பையா, நகரத் தலைவா் சு கண்ணன், புதுக்கோட்டை ஒன்றியத் தலைவா் சாமி உள்ளிட்டோா் பேசினா். மத்திய அரசின் ஹிந்தித் திணிப்புக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.