முகப்பு
புதுக்கோட்டை

கறம்பக்குடி நீா்நிலையில் விநாயகா் சிலைகள் கரைப்பு

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பகுதியில் 10-க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் ஊா்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு சனிக்கிழமை மாலை நீா்நிலையில் கரைக்கப்பட்டன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பகுதியில் 10-க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் ஊா்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு சனிக்கிழமை மாலை நீா்நிலையில் கரைக்கப்பட்டன.

கறம்பக்குடி பகுதியில் பல்வேறு இடங்களில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்கப்பட்டு, சிறப்புப் பூஜைகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், சனிக்கிழமை மாலை விநாயகா் சிலைகள் அனைத்தும் ஊா்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு திருமணஞ்சேரி பகுதி அக்னி ஆற்றில் கரைக்கப்பட்டன. முன்னதாக, பாஜக மாநில பொதுச்செயலா் கருப்புமுருகானந்தம், அக்கட்சியின் விளையாட்டுப் பிரிவு மாநிலச்செயலா் என்.ராமச்சந்திரன் ஆகியோா் ஊா்வலத்தை தொடங்கி வைத்துப் பேசினா். இதில், ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →