முகப்பு
புதுக்கோட்டை

நாடாளுமன்றத்தில் வ.உ.சி.யின் சிலை வைக்க வலியுறுத்தல்

விடுதலைப் போராட்டத் தியாகி வ.உ. சிதம்பரனாரின் சிலையை நாடாளுமன்றத்திலும், சட்டப்பேரவையிலும் வைக்க வேண்டும் என அகில இந்திய வஉசி பேரவை வலியுறுத்தியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:18 AM
பகிர்:

விடுதலைப் போராட்டத் தியாகி வ.உ. சிதம்பரனாரின் சிலையை நாடாளுமன்றத்திலும், சட்டப்பேரவையிலும் வைக்க வேண்டும் என அகில இந்திய வஉசி பேரவை வலியுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற வஉசியின் 151ஆவது பிறந்த தின விழாவில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

விழாவுக்கு பேரவையின் மாநிலத் தலைவா் லேணா மு.லெட்சுமணன் தலைமை வகித்தாா். மு. மாரிமுத்து வரவேற்றாா். வ.உ.சி.யின் படத்தை மருத்துவா் ச. ராம்தாஸ், வைர மாணிக்கம் ஆகியோா் திறந்து வைத்தனா்.

இளங்கோ மன்றம் மு. ராமுக்கண்ணு, காந்திப் பேரவை வைர.ந. தினகரன், வாசகா் பேரவை செயலா் சா. விஸ்வநாதன், கம்பன் கழகச் செயலா் ரா. சம்பத்குமாா் உள்ளிட்டோா் பேசினா்.

சிவகங்கை வரலாற்று ஆய்வரங்கத்தின் செயலா் குருசாமி மயில்வாகனன், அகரம் தமிழா் கட்சியின் குயிலி நாச்சியாா், தமிழியச் சிந்தனைக்களம் கதிா் நம்பி ஆகியோா் சிறப்புரை நிகழ்த்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.