கல்லாலங்குடி அம்மன் கோயில் திருவிளக்கு பூஜை
ஆலங்குடி அருகேயுள்ள கல்லாலங்குடி முத்துமாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆலங்குடி அருகேயுள்ள கல்லாலங்குடி முத்துமாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்திபெற்ற அமமன்கோயில்களில் ஒன்றான கல்லாலங்குடி முத்துமாரியம்மன் கோயிலில் ஆவணிமாத கடைசி ஞாயிற்றுக்கிழமையொட்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில், ஆலங்குடி, பள்ளத்துவிடுதி, கல்லாலங்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனா்.