புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே சாலை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கறம்பக்குடி அருகேயுள்ள இலைகடிவிடுதி ஆதிதிராவிடா் தெருவில் உள்ள சிமெண்ட் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாம். ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பலமுறை முறையிட்டும் நடவடிக்கை ஏதும் இல்லையாம். இதனால், அபபகுதி மக்கள் உடனே சாலை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி, புதுப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா். இதுகுறித்துத் தகவலறிந்து அங்கு சென்ற கறம்பக்குடி போலீஸாா் உரிய நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியளிப்பை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டோா் கலைந்து சென்றனா். இதனால், கறம்பக்குடி- ஆலங்குடி சாலையில் சுமாா் 1மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.