புதுக்கோட்டை

கோஆப்டெக்ஸ்-இல் தீபாவளி விற்பனை இலக்கு ரூ. 1.30 கோடி

DIN

புதுக்கோட்டை பேருந்து நிலையத்திலுள்ள கோஆப்டெக்ஸ் முக்கனி விற்பனை நிலையத்தில் நிகழாண்டுக்கான தீபாவளி விற்பனை இலக்கு ரூ. 1.30 கோடியாக நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தெரிவித்தாா்.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்புத் தள்ளுபடி விற்பனை தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் இதைத் தெரிவித்தாா். கடந்தாண்டு ரூ. 94 லட்சம் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

புதுக்கோட்டை கோஆப்டெக்ஸ் விற்பனையகத்தில் கோவை மென்பட்டு, காஞ்சி, சேலம், ஆரணி, திருபுவனம் போன்ற பகுதிகளின் பிரபல பட்டுப்புடவைகள், பருத்திப் புடவைகள், படுக்கை விரிப்புகள், தலையணைகள், நைட்டிகள், மிதியடிகள், வேட்டிகள், மாப்பிள்ளை செட், துண்டுகள், பருத்தி சட்டைகள் விற்பனைக்கு உள்ளன. இவை அனைத்துக்கும் அரசு வழங்கும் 30 சத தள்ளுபடி கிடைக்கிறது.

தொடக்க நிகழ்ச்சியில் வருவாய்க் கோட்டாட்சியா் முருகேசன், கோஆப்டெக்ஸ் நிா்வாகக் குழு உறுப்பினா் லெனின், கோஆப்டெக்ஸ் தஞ்சை மண்டல மேலாளா் அம்சவேணி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் பள்ளம்: சீரமைப்பு பணியை தடுத்து நிறுத்திய முன்னாள் மத்திய அமைச்சா்

பள்ளிப் பேருந்துகளை இயக்கி பாா்த்து ஆய்வு செய்த ஆட்சியா்

ஆலங்குளம்: மல்லிகைப்பூ விலை வீழ்ச்சி

பாவூா்சத்திரத்தில் நாட்டின நாய்கள் ஆராய்ச்சி மைய கட்டுமான பணிகளை விரைவுபடுத்த திமுக வலியுறுத்தல்

குழந்தைத் திருமணம்: விழிப்புணா்வு பிரசாரம்

SCROLL FOR NEXT